Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“புகார்தாரரிடம் அன்போடும் கனிவோடும் நடந்து கொள்ள வேண்டும்”… எஸ்.பி அறிவுறுத்தல்..!!!

புகார் கொடுக்க வருபவர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் காவல்துறை சார்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தலைமை தாங்கி பேசியுள்ளதாவது, காவல் நிலையங்களுக்கு புகார் கொடுக்க வரும் மக்களிடம் கனிவுடன் பணிவுடனும் மரியாதையுடனும் நடத்த வேண்டும். புகார் கொடுக்க வருபவரை அன்போடு வரவேற்று இருக்கையில் அமரச் செய்து பின் அவர்களின் குறைகளை கேட்க வேண்டும்.

புகார் மனுவை பெற்றுக் கொண்டு பதிவேட்டில் பதிந்து பொறுப்பாளரிடம் தகவல் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிதடி வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்கள் காவல் நிலையத்திற்கு வரும்போது காயம் ஏதேனும் ஏற்பட்டிருந்தால் முதலில் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வர அறிவுறுத்துவதோடு மருத்துவமனையிலேயே புகார்கள் பெறப்படும் எனவும் அறிவுறுத்த வேண்டும். மேலும் பொதுமக்கள் சைபர் குற்றங்கள் பற்றிய புகார்களுக்கு 1930 மற்றும் cybercrime.gov.in என்ற இணையதளத்தில் தெரிவிக்கலாம் என கூறினார்.

Categories

Tech |