ஐபிஎல் மினி ஏலத்தில் 15 வயதே ஆன இளம் வீரர் பதிவு செய்துள்ளார்.
இந்தியாவில் சென்ற 2018 முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் 16-வது சீசன் வருகின்ற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான தொடரில் பங்கேற்று விளையாடும் அணிகள் மற்றும் வீரர்கள் குறித்த பட்டியலை முன்னதாகவே வெளியிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து வருகின்ற டிசம்பர் 23ஆம் தேதி மினி ஏலம் கொச்சியில் நடைபெற உள்ளது.
இந்த மினி ஏலத்தில் அவர்களுக்கு ஏற்ற வீரர்களை வாங்குவதற்காக அணிகள் காத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த சுழல் பந்து வீச்சாளர் அல்லா முகமது கசான்ஃபர் மிகவும் குறைந்த வயதில் தனது பெயரை மினி ஏலத்தில் பதிவு செய்து இருக்கின்றார். 15 வயதே ஆன ஆப்கான் வீரர் மினி ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கின்றது. இவர் 6 அடி 2 அங்குலம் கொண்ட சுழல் பந்து வீச்சாளர். எந்தவித அனுபவம் இல்லாமல் இவரை ஐபிஎல் அணிகள் ஏலத்தில் எடுக்குமா.? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.