Categories
அரசியல்

IPL Mini Auction 2023: ஐபிஎல் மினி ஏலத்தில்… 3 வீரர்களை குறி வைக்கும் சிஎஸ்கே அணி… இதோ ஓர் பார்வை..!!!

ஐபிஎல் மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி ஏலத்தில் கண்டிப்பாக எடுக்க வாய்ப்பிருக்கும் வீரர்கள் குறித்து பார்க்கலாம்.

இந்தியாவில் சென்ற 2018 முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் 16வது சீசன் வருகின்ற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து வருகின்ற டிசம்பர் 23-ஆம் தேதி மினி ஏலம் கொச்சியில் நடைபெற உள்ளது. இந்த மினி ஏலத்தில் 45 வீரர்கள் ஏலம் விடப்பட இருக்கின்றனர். இந்த நிலையில் சிஎஸ்கே அணி கண்டிப்பாக எடுக்க வாய்ப்பிருக்கும் 3 வீரர்கள் குறித்து நாம் பார்க்கலாம்.

அதில் முதலாவதாக ஷாம்கரன். இவர் ஏற்கனவே சிஎஸ்கே அணியில் விளையாடியுள்ளார். ஆல் ரவுண்டரான இவர் சென்ற 2021 சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் விளையாடிய போது சிஎஸ்கே-வின் முக்கிய அங்கமாக திகழ்ந்தார். இவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்து வெல்வதற்கு முக்கிய பங்கு வகித்தார். மேலும் தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். இந்த வருடத்தில் இவர் விளையாடிய 36 டி20 போட்டிகளில் 46 விக்கெட் 495 ரன்கள் எடுத்திருக்கின்றார். அதிரடி பேட்டிங், அசத்தலான பௌலிங் என சிஎஸ்கேவின் முந்தைய  வீரரான இவரை எடுக்கும் நோக்கத்தில் சிஎஸ்கே அணி இருக்கின்றது.

இரண்டாவதாக ரைலீ ரூசோ. இவர் இந்த வருடத்தில் அபாரமாக விளையாடி அனைவரின் பார்வையையும் பெற்றார். இந்திய  அணிக்கு எதிரான t20 கிரிக்கெட் போட்டியில் இவர் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். இவர் 42 டி20 போட்டியில் இரண்டு சதங்கள் என 1342 எடுத்திருக்கின்றார். இதனால் இவரை எடுக்கும் முனைப்பில் சிஎஸ்கே அணி இருக்கின்றது.

அடுத்ததாக நாராயணன் ஜெகதீசன் இருக்கின்றார். இந்திய வீரரான இவர் தோனிக்கு அடுத்தபடியாக இந்திய அணியின் விக்கெட் கீப்பராக பார்க்கப்பட்டவர். இவர் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் என இரண்டிலும் கைதேர்ந்தவர். ஆனால் இவருக்கு போதுமான வாய்ப்புகள் வழங்காமல் சிஎஸ்கே அணி அவரை கைவிட்டது. இவர் உள்நாட்டு தொடர்களில் அபாரமாக விளையாடி வருகின்றார். மேலும் ஒரு நாள் தொடரில் அபாரமாக விளையாடி இரட்டை சதம், தொடர்ச்சியாக 5 சதங்கள் என விளாசி சாதனை படைத்திருக்கின்றார். இவர் சென்ற இரண்டு, மூன்று மாதங்களாகவே அசத்தலான இன்னிங்ஸ் ஆடி கவனத்தை பெற்றுள்ள நிலையில் அணியில் கொண்டு வரும் முயற்சியில் சிஎஸ்கே இருக்கின்றது.

Categories

Tech |