மஞ்சு வாரியாரை நெட்டிசன்ஸ் கலாய்த்து வருகின்றனர்.
வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள நிலையில் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை லைக்கா நிறுவனம் பெற்று இருக்கின்றது.
இத்திரைப்படத்தில் இருந்து முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இரண்டாவது பாடலான காசேதான் கடவுளடா பாடல் வெளியாகி இருக்கின்றது. இந்த பாடலை வைசாக் மற்றும் மஞ்சு வாரியார் இணைந்து பாடியுள்ளார்கள். ஆனால் இந்த பாடலில் மஞ்சு வாரியார் எங்கு பாடி இருக்கிறார் என்றே தெரியவில்லை. இதனால் சோசியல் மீடியாவில் மீம்ஸ் போட்டு அவரை கிண்டல் அடித்து வருகின்றார்கள். இதற்கு சிலர் மஞ்சு வாரியாரின் இனிமையாக குரல் கேட்டு மகிழ்ந்தவர் சார்பாக படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் என நக்கலாக பதிவிட்டுள்ளனர்.