திரையரங்க ஊழியர்கள் அவதார் வேடமணிந்து நின்றது ரசிகர்களின் கவனத்தை பெற்றது.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் சென்ற 2009 ஆம் வருடம் வெளியான திரைப்படம் அவதார். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்தப் படம் 25 கோடி அமெரிக்க டாலர்கள் பொருட் செலவில் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் 250 கோடி அமெரிக்க டாலர்களை வசூல் செய்தது. இதுவரை எந்த திரைப்படமும் இந்த வசூல் சாதனையை முறியடித்தது இல்லை. இந்த நிலையில் தற்போது 12 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் பாகம் டிசம்பர் 16ஆம் தேதி வெளியானது. இப்படம் உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியாகி இருக்கின்றது.
இந்த திரைப்படம் புதுவையிலும் சில தியேட்டரில் வெளியானது. புதுவையில் இருக்கும் கடலூர் சாலையில் செயல்பட்டு வரும் வணிக வளாகத்தில் உள்ள தனியார் திரையரங்கில் வேலை செய்யும் ஊழியர்கள் அவதார் திரைப்படத்தில் வருவது போல வேடமணிந்து ரசிகர்களை வரவேற்றனர். இது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதனால் படம் பார்க்க வந்த ரசிகர்கள் ஊழியர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துச் சென்றார்கள்.