Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்களே ரெடியா…! இன்று மாலை காத்திருக்கும் வாரிசு 3-வது பாடல்… அதுவும் “அம்மா பாடல்”… எதிர்பார்ப்பில் ரசிகாஸ்..!!!

வாரிசு திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் இன்று மாலை வெளியாக உள்ளது.

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இத்திரைப்படத்தில் இருந்து வெளியான இரண்டு பாடலுமே யூடிபில் சாதனை படைத்தது. இந்த நிலையில் மூன்றாவது பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கின்றது. இந்த பாடல் அம்மாவுக்காக என போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. மேலும் இந்தப் பாடலை விவேக் எழுத பாடகி சித்ரா பாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் நீண்ட நாட்களுக்குப் பிறகு அம்மா சென்டிமென்ட் பாடலில் நடிக்க இருக்கின்றார். இந்த அறிவிப்பானது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |