2022-ல் இந்த திரைப்படம் தான் தன்னை மிகவும் கவர்ந்தது என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா உலகில் தற்போது முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி சில திரைப்படங்களை இயக்கி மிகவும் பிரபலமானார். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது இவர் விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள தளபதி 67 திரைப்படத்தை இயக்குகின்றார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் பேசும்போது தெரிவித்துள்ளவது, தள்ளுமால திரைப்படம் இந்த 2022-ல் என்னை கவர்ந்த சிறந்த திரைப்படம். இந்த படத்தை கிட்டத்தட்ட நான்கு தடவை பார்த்திருக்கின்றேன். இந்த திரைப்படத்தை பார்த்து விட்டேன் என பாராட்டி இருக்கின்றார்