விளாத்திகுளத்தில் மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளத்தில் செயல்பட்டு வரும் வேம்பு மக்கள் சக்தி இயக்கம் மற்றும் ரேன்சம் பவுண்டேஷன் சார்பாக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது நடைபெற்றது. இதற்காக பள்ளி மாணவ-மாணவிகளுக்கிடையே பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு ரேன்சம் பவுண்டேஷன் மேற்பார்வையாளர், பேராசிரியர் ராஜபாண்டி தலைமை தாங்க சிறப்பு விருந்தினராக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பங்கேற்றார். மேலும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை தந்தார். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர், தூத்துக்குடி திமுக வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் என பலர் பங்கேற்றார்கள்.