Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இந்த உலகம் எத நோக்கி போகுது..! பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலனை கரம் பிடித்த பெண்… தூக்கிட்டு தற்கொலை.. போக்சோ சட்டத்தில் கணவன் கைது..!!!

திருத்தணி அருகே புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அகூர் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞன் செருக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த மாலினி என்பவரை சென்ற நான்கு மாதத்திற்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை. இவர்கள் இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில் சென்ற இரண்டாம் தேதி மாலினி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதை அடுத்து போலீசார் மாலினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் மாலினியின் பெற்றோர் தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் கொடுத்தார்கள். இதனால் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்கள். போலீசார் விசாரணைக்கு மாலினியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆஜராகினர். அவர்களிடம் விசாரணையும் செய்யப்பட்டது.

ஆனால் விக்னேஷ் மட்டும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், சென்ற 2022 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி 17 வயது சிறுமியான மாலினியை திருமணம் செய்து கொண்டு வீட்டிற்கு அழைத்து வந்ததாகவும் அவரை பலமுறை அடித்து துன்புறுத்தியதாகவும் இதனால் மாலினி மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் வாக்குமூலத்தில் கூறினார்.

இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு குழந்தை திருமணச் சட்டம் தற்கொலைக்கு தூண்டுதல் என பல பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தார்கள். இவர் மீது ஏற்கனவே கஞ்சா வழக்கு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |