Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கொசத்தலை ஆற்று தரைப்பாலத்தில்… கட்டப்படும் 2 பாலப்பணிகள்.. விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை..!!!!

ஊத்துக்கோட்டை அருகே ஒதப்பை கொசத்தலை ஆற்றில் தரைப்பாலத்தில் கட்டப்படும் பால பணிகளை விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கொசத்தலை ஆறு இருக்கின்றது. இந்த ஏரி நிரம்பினால் உபரி நீர் 16 மதகுகள் வழியாக கொசத்தலை ஆற்றில் திறந்து விடப்படும். இந்த ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விடும் போதெல்லாம் கொசுத்தலை ஆற்றின் மீது இருக்கும் தரைப்பாலம் மூழ்கிவிடும். அப்போது பொதுமக்கள் கூடுதல் கட்டணம் செய்து பல்வேறு பகுதிகளுக்கு மாற்று வழியில் செல்லும் நிலை இருக்கின்றது.

இந்த நிலையில் தற்போது பூண்டி ஏரி தனது முழு கொள்ளளவை எட்டிய நிலையில் சென்ற ஒன்பதாம் தேதி மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஊத்துக்கோட்டை-திருவள்ளூர் இடையே வாகன போக்குவரத்திற்கு ஆறு நாட்கள் தடை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் ஆற்றின் மீது பாலம் அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தார்கள். இதனை ஏற்றுக் கொண்ட அரசு இரண்டு பாலங்கள் அமைக்க முடிவு செய்தது. மேலும் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. தற்போது தூண்கள் அமைக்கும் பணியானது நடைபெற்று வருகின்றது. ஆகையால் இரண்டு பாலங்களையும் விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |