விஜயின் அடுத்த திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது
தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் அட்லீ. இவர் நடிகை பிரியாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் எட்டு வருடங்களுக்குப் பிறகு தங்களுடைய முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருப்பதாக சோசியல் மீடியாவில் சில நாட்களுக்கு முன்பாக பதிவிட்டிருந்தார்.
நேற்று பிரியா அட்லீ பிரம்மாண்டமாக வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு விஜயையும் வந்திருந்தார். அவர் அழகிய ஓவியம் ஒன்றை இந்த ஜோடிக்கு பரிசாக தந்திருக்கின்றார். அதனுடன் 400 கோடி மதிப்பிலான தளபதி 68 திரைப்படத்தையும் அட்லீக்கு விஜய் பரிசாக கொடுத்திருக்கின்றாராம். இத்திரைப்படத்தின் அக்ரீமெண்ட் அண்மையில் போடப்பட்டதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்திருக்கின்றார்.