தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் விஜய். இவர் சினிமாவில் அறிமுகமானபோது பல விமர்சனங்களுக்குள்ளாகி தனது விடாமுயற்சியின் மூலம் தற்போது இந்த இடத்தை பிடித்திருக்கின்றார். நடிகராக அறிமுகமாகி பின் இளைய தளபதியாக என்ட்ரி கொடுத்து தற்போது ரசிகர்களின் மனதில் தளபதியாக நிற்கின்றார்.
இவர் தனது ஒவ்வொரு திரைப்படத்தின் மூலம் புதிய சாதனையை படைத்து வருகின்றார். இவரின் திரைப்படங்கள் விமர்சனத்திற்குள்ளானாலும் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுத்து விடும். தமிழ் சினிமா உலகில் ரஜினி கமலுக்கு அடுத்தபடியாக விஜய் அஜித்தை தான் ரசிகர்கள் பார்க்கின்றார்கள். இவ்விரு நடிகர்களின் ரசிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுவது இயல்பான ஒன்று. தற்போது பொங்கலுக்கு வாரிசு மற்றும் துணிவு திரைப்படம் வெளியாவதால் அதிகமான மோதல் ஏற்பட்டு வருகின்றது.
இதனிடையே வாரிசு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜு விஜய் தான் நம்பர் ஒன் ஹீரோ என கூறியது அஜித் ரசிகர்களிடையே மேலும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் தற்போது சோசியல் மீடியாவில் யார் நம்பர் ஒன் நடிகர் என்பது ஹாட் டாபிக்காக இருக்கின்றது. இந்த நிலையில் பிரபல டிக்கெட் புக்கிங் தலமான புக் மை ஷோ 2022 அதிகம் தங்களுடைய தளத்தில் புக் செய்யப்பட்ட டாப் 10 திரைப்படங்கள் குறித்து லிஸ்ட்-ஐ வெளியிட்டு இருக்கின்றது.
இதில் முதலில் கேஜிஎப் திரைப்படமும் இரண்டாவதாக ஆர்.ஆர்.ஆர் திரைப்படமும் மூன்றாவதாக காந்தாரா திரைப்படமும் நான்காவது தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படமும் ஐந்தாவது பொன்னியின் செல்வன் திரைப்படமும் ஆறாவதாக பிரம்மாஸ்திர திரைப்படமும் ஏழாவதாக விக்ரம் திரைப்படமும் எட்டாவது திரிஷ்யம் 2 திரைப்படமும் ஒன்பதாவதுதாக புல் புல்லையா 2 திரைப்படமும் பத்தாவதாக டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் 2 திரைப்படமும் இடம்பெற்றுள்ளது. இந்த வருடத்தில் பெரிய எதிர்பார்க்கும் மத்தியில் விஜயின் பீஸ்ட் திரைப்படமும் அஜித்தின் வலிமை திரைப்படமும் வெளியானது. இருப்பினும் இந்த டாப் 10 லிஸ்டில் இருவரின் திரைப்படமும் இடம்பெறவில்லை குறிப்பிடத்தக்கது.