திருப்பூர் மாநகரில் மின்தடை செய்யப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் சாலை, குமரன் சாலை, புஷ்பா ரவுண்டானா, எஸ்ஏபி சிக்னல் உள்ளிட்ட பல சாலைகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும். இங்கு தானியங்கி சிக்னல் மூலம் போக்குவரத்து சரி செய்யப்படுகின்றது. சிக்னல் இருக்கும்போது போக்குவரத்தை சீர்படுத்துவதே கடினமாக இருக்கும். ஆனால் தற்போது மின்பாதை பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படுவதால் சிக்னல் இயங்காமல் போக்குவரத்து போலீசாரே சீர் செய்கிறார்கள்.
அவர்கள் நாள் முழுவதும் வெயிலில் நின்று போக்குவரத்தை சீர் செய்வதால் சில நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் குழப்பத்துடன் செல்கின்றார்கள். சில நேரங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகின்றது. நேற்று முன்தினமும் மாநகரில் மின்தடை அறிவிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள். அரசு பல திட்டங்களை அறிவிக்கின்றது. ஆனால் மக்களுக்கு மிகவும் பயன் படும் வகையில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரித்து சிக்னலை இயக்கலாம். இது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.