Categories
சினிமா தமிழ் சினிமா

நான் செஞ்ச தப்புக்காக எனது மகனிடம் மன்னிப்பு கேட்பேன்… ஓபனாக பேசிய விஷ்ணு விஷால்..!!!

நான் செய்த தவற்றுக்காக தனது மகனிடம் மன்னிப்பு கேட்பேன் என விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவர் வெண்ணிலா கபடி குழு, நீர் பறவை உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோவாக நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் சென்ற 2010-ம் வருடம் ரஜினி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் இருந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார்கள்.

இதன்பின் விஷ்ணு விஷால் ஜுவாலா கட்டா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர் தற்போது படங்களில் கவனம் செலுத்தி வருகின்ற நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால் யாரிடம் கேட்பீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளதாவது, வருங்காலத்தில் எனது மகனிடம் மன்னிப்பு கேட்பேன். அதற்கு காரணம், அவனது அப்பா-அம்மா ஒன்றாக இல்லை. அதனால் கேட்பேன் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |