தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது பொதுமக்களிடமிருந்து பல்வேறு தரப்பட்ட மனுக்களாக மொத்தம் 360 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்குமாறு துறைச்சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் மூலம் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கங்களுக்கு 12 பேருக்கு தலா 10,000 வீதம் 1,20,000 காசோலையும் நான்கு பேருக்கு விலையில்லா மின் மோட்டருடன் கூடிய தையல் இயந்திரங்களும் ஒருவருக்கு விலை இல்லா தேய்ப்பு பெட்டி என மொத்தமாக 17 பேருக்கு ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 968 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.