சுய தொழில் தொடங்க 30 திருநங்கைகளுக்கு 15 லட்சம் மானியத் தொகை வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கிக் கொண்டார். அந்த வகையில் பல்வேறு தரப்பட்ட மக்களும் தங்களின் கோரிக்கைகளாக மொத்தம் 340 மனுக்களை கொடுத்தனர்.
இதனை பெற்றுக் கொண்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு விரைந்து தீர்வு காணப்பட்டு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இதை அடுத்து சமூக நலத்துறை சார்பாக 30 திருநங்கைகளுக்கு சொந்தமாக சுயதொழில் செய்ய மானிய தொகையை ஆட்சியர் வழங்கினார். இதில் மொத்தமாக 15 லட்சம் மானிய தொகை வழங்கப்பட்டது.