Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

லஞ்சம் கேட்டால் அலுவலர்கள் மீது நடவடிக்கை… பேரூராட்சி தலைவி எச்சரிக்கை..!!!

கோரிக்கைகளை நிறைவேற்ற அலுவலர்கள் லஞ்சம் கேட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி தலைவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி தலைவி சினேகவள்ளி பாலமுருகன் தெரிவித்துள்ளதாவது, ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி அலுவலகத்தில் குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், பிறப்புச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ், பொது சுகாதார என பல்வேறு பணிகளுக்காக மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்படுகின்றது. மேலும் மனுக்கள் மீது உரிய காலத்திற்குள் விசாரணை செய்து நடவடிக்கையும் எடுக்கப்படுகின்றது.

இந்த நிலையில் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க எந்தவித லஞ்சமும் கொடுக்க வேண்டாம். பேரூராட்சிக்கு கொடுக்க வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி உள்ளிட்ட தொகையை செலுத்தி அதற்கான ரசீதை மக்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்ற பணியாளர்கள் கால தாமதம் செய்தாலோ அல்லது லஞ்சம் கேட்டாலோ 9442358822 என்ற எண்ணிலோ அல்லது பேரூராட்சி அலுவலகத்திலோ புகார் கொடுக்கலாம். லஞ்சம் கேட்பது உறுதியானால் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |