Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கைப்பந்து விளையாட்டுக்கு பயிற்சியாளர் விண்ணப்பிக்கலாம்.. ஆட்சியர் அறிவிப்பு..!!!

தூத்துக்குடியில் கேலோ இந்தியா மாவட்ட மையத்துக்கு கைப்பந்து விளையாட்டுக்கு பயிற்சியாளர் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கேலோ இந்தியா திட்ட நிதி உதவியில் தொடக்கநிலை கைப்பந்து பயிற்சிக்கான “விளையாட்டு இந்தியா” மாவட்டம் மையம் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் அமைக்கப்பட இருக்கின்றது. இதில் 30 முதல் 100 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சேர்க்கப்பட்டவர்களுக்கு நாள்தோறும் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இதில் சேர குறைந்தபட்சமாக 5 வருடங்களாவது தூத்துக்குடி மாவட்டத்தில் வசித்து வருபவராக இருக்க வேண்டும். மேலும் சர்வதேச போட்டிகள் அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவராக இருக்க வேண்டும் அல்லது அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டியில் பங்கேற்று பதக்கம் பெற்றவராகவோ இருக்க வேண்டும். இதில் 11 மாதங்களுக்கு பயிற்சியாளர்களுக்கு மாதாந்திர பயிற்சி கட்டணமாக 18000 வழங்கப்படுகின்றது. இது நிரந்தர பணி கிடையாது. இது தற்காலிகமானதே. இதில் விண்ணப்பிக்க வருகின்ற ஜனவரி மூன்றாம் தேதி கடைசியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |