மனைவியின் நடத்தை மீது சந்தேகம் பட்டு அம்மிக்கல்லால் அடித்து தொழிலாளி கொலை செய்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளத்தை அருகே இருக்கும் கோழிப்பண்ணையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நூர்தீன் ஷேக் என்பவர் தனது மனைவியுடன் தங்கி வேலை செய்து கொண்டிருந்தார். இதனிடையே சொந்த ஊருக்குச் சென்று மீண்டும் கோழி பண்ணைக்கு வேலைக்கு திரும்பினார். இந்த நிலையில் அவருக்கு தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டதால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் நூர்தின் ஷேக் தனது மனைவி ரக்ஷிதாவின் தலையில் அம்மி கல்லால் பலமாக தாக்கி கொலை செய்ய முயற்சி செய்ததாக சொல்லப்படுகின்றது.
இதை தொடர்ந்து அவரின் அலறல் சத்தம் கேட்டு கோழி பண்ணை மேலாளர் மற்றும் உரிமையாளர் உள்ளிட்டோர் விரைந்து சென்றபோது ரக்ஷிதா பலத்த காயத்துடன் மயங்கி இருந்தார். இதையடுத்து இதுபற்றி காவல் நிலையத்திற்கு கோழிப்பண்ணை மேலாளர், முதலாளி உள்ளிட்டோர் தகவல் கொடுத்தனர். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நூர்தீன் ஷேக்கை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். இந்த நிலையில் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரக்ஷிதா பரிதாபமாக உயிரிழந்ததை தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.