விஜயை ப்ளு சட்டை மாறன் விளாசியுள்ளார்.
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் இருந்து வெளியான 3 பாடலுமே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற டிசம்பர் 24ஆம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் விஜயை விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் கூறியுள்ளதாவது, வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜய் பட்டாசு கடை, பூக்கடை போன்ற அதிரடி அரசியல் பஞ்ச் பேசுவாரா? இல்லை கம்முனு இருந்தா வாழ்க்கை ஜம்முனு இருக்கும் என பம்முவாரா..? ரெய்டுக்கு பிறகு ஆடியோ லான்ச் அரசியல் பேச வேண்டாமென முடிவா? புலி பாயுமா? பதுங்குமா? என விமர்சித்துள்ளார்.
வாரிசு இசை வெளியீடு 24 ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
பட்டாசுக்கடை, பூக்கடை போன்ற அதிரடி அரசியல் பஞ்ச் பேசுவாரா அல்லது கம்முனு இருந்தா வாழ்க்கை ஜம்முனு இருக்கும் என்று பம்முவரா?
ரெய்டிற்கு பிறகு.. ஆடியோ லாஞ்ச் அரசியல் பேச வேண்டாமென முடிவா? புலி பாயுமா? பதுங்குமா?
— Blue Sattai Maran (@tamiltalkies) December 21, 2022