போலீஸ் இன்ஸ்பெக்டரின் விழிப்புணர்வு வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மாநகரப் பேருந்தில் அண்மைக்காலமாகவே திருட்டு, ஜேப்படி உள்ளிட்ட சம்பவங்களும் இணையதளம் மோசடி, செல்போன் மூலம் ஓடிபி, ஏடிஎம் கார்டு எண் உள்ளிட்டவற்றை கேட்டு பணம் மோசடி செய்வது அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை தடுப்பதற்கு பல்வேறு முயற்சிகள் செய்தும் மோசடி செயலில் ஈடுபடுபவர்கள் எப்படியும் ஏமாற்றி மோசடி செய்து விடுகின்றார்கள்.
இந்த நிலையில் திருச்சி மாநகர தீவிர குற்ற தடுப்பு பிரிவில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் கருணாகரன் தற்போது பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டராகவும் கூடுதல் பொறுப்பு வகித்து வருகின்றார். இவர் பாலக்கரை வழியாக செல்லும் பேருந்துகளை பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளிடம் ஆன்லைன் மோசடி, திருட்டு சம்பவங்கள் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார். இது குறித்த வீடியோவானது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.