Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

300-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள்… ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு மனு..!!!

300-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் ஒன்று திரண்டு ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்ரீரங்கம், பாலக்கரை, உறையூர், கண்டோன்மெண்ட், எடமலைபட்டிபுதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் ஒன்று திரண்டு மனு ஒன்றை அளித்தார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, திருச்சி அனைத்து டிரைவர்களும் மீட்டர் கட்டணத்தை 1.8 கிலோ மீட்டருக்கு ரூபாய் 50-க்கும் அதற்கு மேல் செல்லும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூபாய் 16 என நினைத்திருக்கின்றோம்.

ஆட்டோ டிரைவர்கள் வைத்திருக்கும் வாட்ஸ் அப் மூலம் செல்போன் எண்ணை பகிர்ந்து எந்த கமிஷனும் இல்லாமல் பொதுமக்களுக்கு நேரடியாக சேவை செய்கின்றோம். ஆனால் ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலமாக அனைத்து டிரைவர்களும் பாதிக்கப்படுகின்றார்கள். ஆகையால் கார்ப்பரேட் நிறுவனங்களை தடை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |