Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்திடம் பிடிக்காத விஷயம் என்ன..? ஓப்பனாக பேசிய துணிவு பட இயக்குனர்..!!!

அஜித்திடம் பிடிக்காத விஷயம் குறித்து வினோத் பேசியுள்ளார்.

வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள நிலையில் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை லைக்கா நிறுவனம் பெற்று இருக்கின்றது.

இந்த நிலையில் துணிவு பட இயக்குனர் வினோத் ப்ரோமோஷனுக்கான வேலைகளில் இறங்கியுள்ளார். அந்த வகையில் பல பேட்டிகளில் துணிவு திரைப்படம் பற்றியும் அஜித்துடன் பணியாற்றியது பற்றியும் வெளிப்படையாக பேசியிருக்கின்றார். அப்போது அஜித் குறித்து அவர் பேசிய விஷயம் ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது. அவரிடம் உங்களுக்கு அஜித்திடம் பிடிக்காத விஷயம் ஒன்றை கூறுங்கள் என கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்ததாவது, அஜித்திடம் ஒரு முறை பழகினாலே அவரை பிடிக்காதவர்களுக்கு கூட அவரின் ரசிகர்கள் ஆகிவிடுவார்கள். அந்த அளவிற்கு அஜித் அனைவரிடமும் பழகுவார். ஆகையால் அவரிடம் பிடிக்காத விஷயம் என ஒன்றுமே இல்லை என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |