நயன்தாரா திரைப்படத்தின் பார்க்கலாம்.
தமிழ் சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகின்றார் நயன்தாரா. இவர் நடித்துள்ள கனெக்ட் திரைப்படத்தை விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார். மேலும் அஸ்வின் சரவணன் இயக்கியிருக்கின்றார். இந்த படத்தில் நயன்தாரா சூசன் என்ற கதாபாத்திரத்திலும் அவரது டாக்டர் கணவராக ஜோசப் கதாபாத்திரத்தில் வினையும் நடித்துள்ளனர். இந்த படத்தில் நயன்தாரா தனது கணவர், தந்தையாக நடித்துள்ள சத்யராஜ் மற்றும் மகள் உள்ளிட்டோருடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றார். அப்போது புதிய வகை வைரஸான கொரோனா ஊருக்குள் பரவுவதால் ஊரடங்கு அமல்படுத்தப்படுகின்றது.
இந்த வைரஸால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை அளிக்கும் டாக்டர் வினய் நோய் தாக்கி உயிரிழக்கின்றார். பின்னர் நயன் மற்றும் அவரது மகள் இருவரும் நோய் தாக்கி தனிமைப்படுத்தப்படுகின்றார்கள். அப்போது தனது அப்பாவிடம் பேசுவதற்காக அன்னா ஆன்லைனில் ஒரு மந்திரவாதி மூலம் பேச ஆரம்பிக்கின்றார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட அந்த மந்திரவாதி தவறான ஆவியை ஏவி விடுகின்றான். இதில் சிக்கிக் கொள்ளும் தனது மகனை நயந்தாரா கண்டுபிடித்தாரா? தனது மகளை இதிலிருந்து மீட்டாரா என்பது படத்தின் மீதி கதையாகும்.
படத்தில் நயன்தாரா தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றார். அவரின் உணர்ச்சிமிக்க நடிப்பு அனைவரின் பாராட்டுகளை பெற்றுள்ளது. தந்தையாக நடித்துள்ள சத்யராஜ் தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டல்களை பெற்றிருக்கின்றார். மகளாக நடித்துள்ள தனியா நஃபீசா கதாபாத்திரத்திற்கு சரியான தேர்வாக உள்ளார். படத்தில் வினய் சிறிது நேரம் வந்தாலும் அவரின் நடிப்பு கவனிக்கும் வண்ணம் உள்ளது. ஊரடங்கு காலகட்டத்தில் வீட்டில் சிக்கி தவித்த மக்களின் மனநிலையை தனது கற்பனைகளோடு கலந்த திரைப்படமாக தந்துள்ளார் இயக்குனர். படத்தில் அனைத்துமே கனக்கச்சிதமாக உள்ளது.