பிரபல கவர்ச்சி நடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர் நடிகை ஊர்பி ஜாவேத். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் இவர் அதிகப்படியான ரசிகர்களை கவரும் வண்ணம் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவார். இந்த நிலையில் இவருக்கு தொலைபேசி மூலமாக மர்ம நபர் ஒருவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்திருக்கின்றார்.
அந்த மர்ம நபர் தொடர்ந்து நடிகைக்கு பாலியல் தொல்லை கொலை மிரட்டல் விடுத்திருக்கின்றார். இதுக்குறித்து நடிகை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் அந்த மர்ம நபர் நவீன் கிரி என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து பாலியல் துன்புறுத்தல், பின் தொடருதல், கொலை மிரட்டல் விடுத்தல் என பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.