Categories
சினிமா தமிழ் சினிமா

பத்து நிமிட புகழுக்காக பரப்பும் வதந்தி.. “இது ஆதாரமற்றது”.. கலைப்புலி எஸ்.தாணு விளக்கம்..!!!

வாடிவாசல் திரைப்படம் பற்றி பரவிய வதந்திக்கு கலைப்புலி எஸ்.தாணு விளக்கமளித்துள்ளார்.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா தற்போது சிவா இயக்கும் சூர்யா 42 திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தின் முதல் கட்ட படபிடிப்பானது சமீபத்தில் நிறைவடைந்தது. இதனிடையே சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்திலும் நடிக்கின்றார். மேலும் அண்மையில் பாலா இயக்கும் வணங்கான் திரைப்படத்திலும் சூர்யா நடித்து வந்த நிலையில் சில காரணங்களால் படத்தில் இருந்து விலகினார்.

இந்த நிலையில் வாடிவாசல் திரைப்படத்திலிருந்தும் சூர்யா விலக முடிவெடுத்து இருப்பதாகவும் இத்திரைப்படம் கைவிடப்பட்டிருப்பதாகவும் செய்தி வெளியானது. இது பற்றி தயாரிப்பாளர் எஸ்.தாணு விளக்கம் அளித்திருக்கின்றார். அவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் இது ஆதாரமற்ற வதந்திகள் எனவும் மக்கள் தங்கள் 10 நிமிட புகழுக்காக இது போன்ற வதந்திகளை பரப்புவதாகவும் யாரும் இதனை நம்ப வேண்டாம் எனவும் தற்போது படத்தின் ப்ரீ ப்ரொடெக்ஷன் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |