Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

ஆக்சனில் கலக்கும் த்ரிஷா… ராங்கி படத்தின் டிரைலர் ரிலீஸ்… இணையத்தில் வைரல்..!!!

த்ரிஷா நடிக்கும் ராங்கி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா ராங்கி என்ற படத்தில் நடித்திருக்கின்றார். லைகா தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுத “ராங்கி” எனும் படத்தை இயக்குனர் எம். சரவணன் இயக்கியுள்ளார்.  இத்திரைப்படத்திற்கு சி.சத்யா இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட போது படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் படத்தில் நிறைய சர்ச்சை இருப்பதாக தெரிவித்து படத்திற்கு அனுமதி வழங்க மறுத்தனர்.

மேலும் படத்தை மேல்முறையீட்டு குழுவிற்கு கொண்டு சென்று அங்கு குறிப்பிட்ட காட்சிகளை நீக்கினால் மட்டுமே அனுமதி தர முடியும் என தெரிவித்தார்கள். இதனையடுத்து முப்பது காட்சிகளை நீக்கிய பிறகு தணிக்கை குழு யுஏ சான்றிதழை வழங்கியது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கின்றது. திரிஷா ஆக்சன் காட்சியில் மிரட்டும் இந்த ட்ரெய்லரானது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.

Categories

Tech |