நயன்தாரா திரைப்படத்தை திருட்டுத்தனமாக ஆன்லைனில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ் சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகின்றார் நயன்தாரா. இவர் நடித்துள்ள கனெக்ட் திரைப்படத்தை விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார். மேலும் அஸ்வின் சரவணன் இயக்கியிருக்கின்றார். இந்த படத்தில் நயன்தாரா சூசன் என்ற கதாபாத்திரத்திலும் அவரது டாக்டர் கணவராக ஜோசப் கதாபாத்திரத்தில் வினையும் நடித்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா தனது கணவர், தந்தையாக நடித்துள்ள சத்யராஜ் மற்றும் மகள் உள்ளிட்டோருடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றார். அப்போது புதிய வகை வைரஸான கொரோனா ஊருக்குள் பரவுவதால் ஊரடங்கு அமல்படுத்தப்படுகின்றது.
இந்த படம் ஊரடங்கில் வீட்டில் மாட்டிக்கொள்ளும் குடும்ப கதைக்களத்தை கொண்டு உருவாகியது உள்ளது. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில் படத்தை 2634 இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடுவதை தடுக்ககோரி தயாரிப்பாளர் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிர்வனம் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கானது நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் பட தயாரிப்பு நிறுவனம் சார்பாக வழக்கறிஞர் ஆஜராகி கனெக்ட் படத்தை திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிட்டால் பெரும் நஷ்டம் ஏற்படும். திரைதுறையினரின் வாழ்க்கையும் பாதிக்கப்படும். ஆகையால் சட்டவிரோதமாக வெளியிட தடை விதிக்க வேண்டும் என வாதாடினார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி கனெக்ட் திரைப்படத்தை சட்டவிரோதமாக 2634 இணையதளத்தில் வெளியிடுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டிருக்கின்றார்.