காங்கயம் நகராட்சியில் 117 டன் மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் அரியலூரில் இருக்கும் சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்பப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கயம் நகராட்சியில் 40,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றார்கள் இந்த குடியிருப்புகளில் சேரும் குப்பைகளை நகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலமாக நாள்தோறும் மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள் என தனித்தனியாக சேகரிக்கப்படுகின்றது.
இதில் மக்கும் குப்பைகளை உரமாக்கி விவசாய பணிகளுக்கு வழங்கப்படுகின்றது. இதில் மக்காத கழிவுகளில் ஒரு பகுதியான பிளாஸ்டிக் பொருள்களை மறுசுழற்சி செய்வதற்காக அரியலூரில் உள்ள அல்ட்ரா சிமெண்ட் ஆலை மற்றும் டால்மியா சிமெண்ட் ஆலைகளுக்கு எரிபொருளாக வழங்கப்படுகின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அரியலூர் சிமெண்ட் ஆலைக்கு பிளாஸ்டிக் கழிவுகள் 8 டன் லாரியில் அனுப்பப்பட்டது.