இசை வெளியீட்டு விழாவிற்கு நாயகி ராஷ்மிகா மந்தனா வந்திருக்கின்றார்.
பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை தில் ராஜ் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. இது முழுக்க முழுக்க சென்டிமென்ட் கதையாக உருவாக இருக்கிறது என்று வாரிசு திரைப்பட வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே ஹைதராபாத் போன்ற பகுதிகளில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு பல்வேறு கட்டங்களாக பாடல் மற்றும் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், ஃபர்ஸ்ட் சிங்கிள், செகன்ட் சிங்கிள் என பாடல்கள் வெளியாகின. இந்த நிலையில் தான் இந்த திரைப்படத்தின் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.
இன்று மாலை ஆறு மணிக்கு வாரிசு திரைப்படத்தின் கோலாகல இசை வெளியீட்டு விழா தொடங்கியுள்ளது. ஆனால் ரசிகர்கள் மதியம் 2 மணிக்கே வந்து குவிய ஆரம்பித்து விட்டார்கள். குறிப்பாக நடிகர் விஜய், நடிகை ராஷ்மிகா மந்தனா, நடிகர்கள் சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு மற்றும் பட குழுவினர் அனைவருமே வாரிசு இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க இருக்கிறார்கள். அதன் காரணமாகவே தற்பொழுது ரசிகர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக நேரு விளையாட்டு அரங்கிற்கு வந்திருக்கின்றார். அவரின் புகைப்படத்தை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றார்கள்.
Looks like our #Ranjithame is here 😍
The gorgeous @iamRashmika is at #VarisuAudioLaunch now ❤️#Thalapathy @actorvijay sir @directorvamshi @MusicThaman #Varisu #VarisuMusic #VarisuPongal pic.twitter.com/EkRknnyLCI— 𝐕𝐈𝐉𝐀𝐘 𝐅𝐀𝐍𝐒 𝐂𝐋𝐔𝐁 (@VijayFansClubWw) December 24, 2022