Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

“இனி விஜய் சார் தான் என்னுடைய ஃபேவரட்”… வாரிசு இசை வெளியீட்டு விழாவில் நடன இயக்குனர் ஓபன் டாக்…!!!

விஜய் சார் தான் என்னுடைய ஃபேவரட் என நடன இயக்குனர் ஜானி பேசி உள்ளார்.

பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை தில் ராஜ் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. இது முழுக்க முழுக்க சென்டிமென்ட் கதையாக உருவாக இருக்கிறது என்று வாரிசு திரைப்பட வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே ஹைதராபாத் போன்ற பகுதிகளில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு பல்வேறு கட்டங்களாக பாடல் மற்றும் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில்,  ஃபர்ஸ்ட் சிங்கிள்,  செகன்ட் சிங்கிள் என பாடல்கள் வெளியாகின. இந்த நிலையில் தான் இந்த திரைப்படத்தின் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடன இயக்குனர் ஜானி விஜய் குறித்து பேசி உள்ளார். அவர் கூறியுள்ளதாவது, நான் நிறைய ஹீரோக்களுடன் பணியாற்றியுள்ளேன். என்னைப் பொறுத்த வரையில் தெலுங்கில் பவன் கல்யாண் எனக்கு மிகவும் ஃபேவரிட். தற்போது விஜய் சார் என்னுடைய ஃபேவரிடாக மாறி இருக்கின்றார். எல்லா இளம் திறமையாளர்களையும் அவர் ஊக்குவிக்கின்றார் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |