Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

“தீ இவர் தளபதி” அன்றே கணித்த சின்ராசு…. C.M கலைஞரிடம் சொன்னது நடந்துட்டு…! இசைவெளியீட்டு விழாவில் சம்பவம் …!!

வருங்கால சூப்பர் ஸ்டார் விஜய் என கூறியதாக சரத்குமார் பேசியுள்ளார்.

பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை தில் ராஜ் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. இது முழுக்க முழுக்க சென்டிமென்ட் கதையாக உருவாக இருக்கிறது என்று வாரிசு திரைப்பட வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே ஹைதராபாத் போன்ற பகுதிகளில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு பல்வேறு கட்டங்களாக பாடல் மற்றும் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில்,  ஃபர்ஸ்ட் சிங்கிள்,  செகன்ட் சிங்கிள் என பாடல்கள் வெளியாகின.

இந்த நிலையில் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நேரு விளையாட்டு அரங்கில் ஆரம்பமாகி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு நடிகை ரஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷியாம், அனிருத், பிரகாஷ்ராஜ், சங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, கணேஷ் வெங்கட்ராமன் என திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டுள்ளார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சரத்குமார் பேசும்போது, “சூரியவம்சம் 175-வது நாள் அன்று அப்போது முதல்வராக இருந்த கலைஞரிடம் வருங்கால சூப்பர் ஸ்டார் விஜய் என்று கூறினேன். இன்று இவ்வளவு பெரிய சாம்ராஜ்யம் உருவாக்கி இருக்காரு நம்ம தளபதி என பேசியுள்ளார்.

Categories

Tech |