Categories
சினிமா தமிழ் சினிமா

“நாங்க எல்லாரும் பாசமான அண்ணன்-தம்பி”… ஆனா நான் தான் வில்லன் செல்லம்… நடிகர்கள் பேசியதை கொண்டாடும் ரசிகாஸ்…!!!

இசை வெளியீட்டு விழாவில் நடிகர்கள் பேசியதை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை தில் ராஜ் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது.

இந்த நிலையில் இசை வெளியீட்டு விழா இன்று நேரு விளையாட்டு அரங்கில் ஆரம்பமாகி பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றது. இந்த விழாவிற்கு நடிகை ரஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷியாம், அனிருத், பிரகாஷ்ராஜ், சங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, கணேஷ் வெங்கட்ராமன் என திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டுள்ளார்கள்.

இந்த நிலையில் நிகழ்ச்சியில் பேசிய சரத்குமார் நாங்கள் எல்லாரும் பாசமான அண்ணன் தம்பி தான் என தெரிவித்திருக்கின்றார். ஆனால் நான் தான் வில்லன் செல்லம் என பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். இதனை ரசிகர்கள் ட்விட்டர் மூலம் கொண்டாடி வருகின்றார்கள்.

Categories

Tech |