Categories
சினிமா தமிழ் சினிமா

“பிக்பாஸ் பிரபலம் கைது”… சோசியல் மீடியாவில் பரவிய தகவல்… நடிகை விளக்கம்..!!!!

பிரபல நடிகை கைது செய்யப்பட்டதாக தகவல் பரவிய நிலையில் அவர் விளக்கமளித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர் நடிகை உர்பி ஜாவித். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் இவர் அதிகப்படியான ரசிகர்களை கவரும் வண்ணம் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவார்.

இந்த நிலையில் இவர் சில நாட்களுக்கு முன்பாக துபாயில் பொது இடத்தில் கவர்ச்சி உடையில் தன்னை வீடியோ எடுத்ததாகவும் அங்கு பொது இடங்களில் வீடியோ எடுப்பது குற்றம் என்பதால் இவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் சோசியல் மீடியாவில் செய்தி பரவியது.

இந்த நிலையில் இது குறித்து நடிகை விளக்கமளித்துள்ளதாவது, என்னை துபாய் போலீசார் கைது செய்யவில்லை. நாங்கள் குறிப்பிட்ட நேரத்தை தாண்டி படபிடிப்பை நடத்தியதால் போலீசார் விசாரணை மேற்கொண்டார்கள். தற்போது அதே இடத்தில் படபிடிப்பை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |