Categories
சினிமா தமிழ் சினிமா

சிரிப்ப பாரு என் செல்லங்களுக்கு..! மறக்க முடியாத படமாகும் ”வாரிசு”…. எதிர்பார்ப்பை தூண்டிவிட்ட தளபதி …!!

நேற்று நடந்த வாரிசு இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், என்னுடைய இயக்குனர் வம்சி சார் எப்படின்னா.? அவர் சொல்ற கதையை கேட்டு எல்லாருமே ஓகே சொல்லிடுவாங்க. ஆனா செட்டுல இருக்கிற யாருக்குமே அவர் ஒரு தடவையில டேக் ஓகே பண்ணுனதே இல்லை. சிரிப்ப பாரு என் செல்லங்களுக்கு..! நான் என்ன சொல்ல வரன்னா..  அவர் நினைச்சதை ஸ்கிரீன்ல வரவரைக்கும் கடுமையாக வேலை செய்யும் ஒரு இயக்குனர்.

யாரும் தப்பா நினைக்க வேண்டாம். சார்  கிட்டத்தட்ட 2 வருஷத்துக்கு முன்னாடி கொரோனா காலத்தில் சந்தித்தேன். நல்ல ஒரு ஃபேமிலி என்டேர்டைன்மெண்ட் படம் பண்ணலாம் என சொன்னார், சூப்பர் சார். நம்ம நண்பா,  நண்பிகள் எல்லாருமே நமக்கு ஒரு ஃபேமிலி மாதிரி தானே. அதனால அவர்களுக்கும் எனக்கும்  சேர்த்து இந்த படத்தை தந்திருக்காரு.

சார் முதல் நாளில் இருந்து ஒன்றை திரும்பத்திரும்ப சொல்லிக்கிட்டே இருப்பாரு, மறக்கமுடியாத ஒரு படத்தை பண்ணலாம் விஜய் அப்படின்னு சொல்லிட்டே இருப்பாரு. அந்த மாதிரி மறக்க முடியாத ஒரு படத்தை எனக்கு கொடுத்ததற்கு நன்றி சார். மேலும் உங்களுடைய ரைட் டெக்னீசியன் ஹரி, பாடலாசிரியர் விவேக், அசிசோர் சாலமன், உங்களுடைய கார்த்திக் பழனி தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளில் மொழிகளில் நிலைத்து நிற்க போறாரு. அப்படி ஒரு வேலையை தான் பார்க்கிறேன்.

அனைவருக்கும் எனது நன்றிகள். அதிலும் குறிப்பாக பாடலாசிரியர் விவேக் அவர்களுக்கு சிறப்பு நன்றி. அவருக்குள்ள ஒரு இயக்குனரும் இருக்காரு. அதை நீங்க கூடிய சீக்கிரம் பார்ப்பீர்கள். அது திரைக்கதை, வசனம், பாடலாசிரியர் என அனைத்திலும் அவரின் பங்களிப்பு இருக்கின்றது என தெரிவித்தார்.  நடிகர் விஜய்யே மறக்க முடியாத படத்தை கொடுத்ததற்கு நன்றி என சொல்லி உள்ளதால், இந்த படம் நடிகர் விஜய் சினிமா பயணத்தில் தரமானதாக இருக்கும் எனவும், மறக்க முடியாத அளவுக்கு சாதனைகளை குவிக்க போகின்றது எனவும் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Categories

Tech |