ஆழ்வார்தாங்கல் கிராமத்தில் கால்நடை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடியில் உள்ள காரணப்பட்டு அருகே இருக்கும் ஆழ்வார்தாங்கல் கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பாக சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணை தலைவர் உள்ளிட்டோர் தலைமை தாங்க வேளாண்மை கல்லூரியை சேர்ந்த இறுதியாண்டு மாணவர்கள் பங்கேற்று களப்பணி ஆற்றினார்கள்.
இந்த முகாமின் போது கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், தடுப்பூசி போடுதல், சினை பரிசோதனை செய்தல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டது. மேலும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.