Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வேலூர் மாநகராட்சியில் நிலுவையில் உள்ள வரி… வசூலிக்கும் பணி தீவிரம்…!!!

மாநகராட்சியில் நிலவையில் இருக்கும் வரி மற்றும் வாடகையை வசூலிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது.

வேலூர் மாநகராட்சியில் பலதரப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகள் செய்யப்பட்டு வருகின்றது. மாநகராட்சியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காக விளங்குவது நிதி ஆதாரம் ஆகும். மாநகராட்சிக்கு நிதியானது சொத்துக்களை ஏலம் விடுதல், வாடகைகள், சொத்து வரி, தண்ணீர் வரி, பாதாள சாக்கடை இணைப்பு வரி என பல்வேறு வரிகள் மூலமாகத்தான் வருகின்றது. ஆனால் வாடகை மற்றும் வரிகளை பலர் செலுத்தாமல் இருக்கின்றார்கள்.

இதன் காரணமாக மாநகராட்சிக்கு நிதி சுமை ஏற்படுகின்றது. இதனால் அண்மைக்காலமாகவே வரி வசூல் செய்யும் பணிக்கு முக்கியத்துவம் தரப்படுகின்றது. இந்த நிலையில் வேலூர் மாநகராட்சியில் 160 கோடி நிலுவையில் இருந்த நிலையில் தற்போது 40 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. மீதம் இருக்கும் 120 கோடி வசூலிக்கும் பணியானது தீவிரமாக நடந்து வருகின்றது. ஆகையால் பொதுமக்கள் காலக்கெடுவுக்குள் செலுத்த வேண்டிய வரிகளை தாங்களாகவே முன்வந்து செலுத்த வேண்டும் என மாநகராட்சி சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Categories

Tech |