Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க… முதியோர்களுக்கு பதில் வேறுநபர்கள்… அங்கீகார சான்று வினியோகம்..!!!

ரேஷன் கடைகளில் முதியோர்களுக்கு பதிலாக பொருட்கள் வாங்கும் நபர்களுக்கு அங்கீகாரம் சான்று வழங்கப்பட்டு வருகின்றது.

நியாய விலை கடையில் பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் அதற்கு ரேஷன் கார்டு மிகவும் அவசியமாக உள்ளது. மேலும் கார்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் ஒருவரின் பயோமெட்ரிக் முறையில் கட்டாயம் வில் ரேகையை வைத்தால் மட்டுமே பொருட்கள் வாங்க முடியும். இந்நிலையில் ஆதரவற்ற முதியோர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள் என பலர் கைரேகை வைத்து பொருட்கள் வாங்கி செல்வதில் சிரமத்திற்கு உள்ளாகின்றார்கள்.

சில நேரத்தில் அவர்களின் கைரேகை கருவியில் ஏற்றுக்கொள்ளாமல் போகின்றது. இதனால் அவர்கள் பலமுறை கைரேகை வைத்தும் பொருட்கள் வாங்க முடியாத நிலை இருக்கின்றது. இதன் காரணமாக அவர்களின் வசதிக்காக அவர்கள் நியமிக்கும் நபர்களுக்கு பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. தற்போது அந்த நபருக்கான அங்கீகாரச் சான்றானது வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இதுவரை வேலூர் மாவட்டத்தில் முதியோர்களுக்கு பதில் வேற நபர்கள் பொருட்கள் வாங்க 15,000 பேருக்கு அங்கீகார சான்று வழங்கப்பட்டு இருக்கின்றது.

Categories

Tech |