இரும்பு வியாபாரியிடம் போலி நகையை விற்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் அருகே இருக்கும் காவேரி தெருவை சேர்ந்த பாலமுருகன் என்பவர் அப்பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வருகின்றார். இந்த நிலையில் இவரிடம் இரண்டு மர்ம நபர்கள் பழைய இரும்புகளை எடைக்கு போட்டு பணம் வாங்கி உள்ளார்கள். அப்போது அவர்கள் தங்களுக்கு களிமண் எடுக்க சென்றபோது தங்க புதையல் கிடைத்திருப்பதாகவும் அதனை விற்க வேண்டிம் எனவும் பாலமுருகனிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார்கள். இதை நம்பிய பாலமுருகன் நகையை தானே வாங்கிக் கொள்வதாக தெரிவித்திருக்கின்றார்.
அதன்படி நேற்று முன்தினம் மர்ம நபர்கள் இரண்டு பேரும் காளியம்மன் கோவில் அருகே பாலமுருகனை வரவழைத்து இரண்டு கிலோ எடை இருக்கும் தங்க முத்துமாலையை பாலமுருகனிடம் கொடுத்தார்கள். ஆனால் அதன் மீது சந்தேகம் அடைந்த பாலமுருகன் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். பின் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரண்டு பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தார்கள். மேலும் அவர்கள் விற்க முயன்றது போலி என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அர்ஜுன், வீரூ என்ற இரண்டு பேரை கைது செய்து அவர்களிடம் இருந்தால் போலி நகைகளையும் பறிமுதல் செய்தார்கள்.