Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் ரொம்ப உயரமா இருப்பதாக விமர்சித்தாங்க”… ஆனா இப்போ… ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்..!!!!

தனது உயரத்தை பார்த்து விமர்சனம் செய்ததாக நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன் தற்போது பல திரைப்படங்களில் நடித்த வருகின்றார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் தனது உயரம் குறித்து பேசிய ஸ்ருதிஹாசன், நான் சினிமாவில் நடிக்க வந்த போது எனது உயரத்தை பார்த்து விமர்சனம் செய்தார்கள். நீ என்ன இவ்வளவு உயரமாக இருக்கின்றாய் என எல்லாரும் வியப்பாக கேட்டார்கள். மேலும் உனது உயரம் தான் உனக்கு மைனஸ் என்றும் கூட சொன்னார்கள்.

இதனால் எனக்கு கொஞ்சம் பயமாக இருந்தது. காரணம் சினிமா துறையில் உயரமாக இருக்கும் ஹீரோக்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. ஆனால் இதன் பிறகு ஒரு கட்டத்தில் உயரம் என்பது ஒரு பிரச்சனையே இல்லை என்பது எனக்குத் தெரிந்தது. தற்போது எனக்கு உயரம் தான் என்னுடைய பிளஸ் பாயிண்ட் ஆக உள்ளது. மகேஷ் பாபு, பிரபாஸ் உள்ளிட்ட ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க எனக்கு வாய்ப்பு வந்ததற்கான காரணம் எனது உயரம் தான். எனக்கும் சில பலவீனங்கள் இருக்கின்றது. அதை சரி செய்து கொள்ள தற்போதைக்கு நான் முயற்சித்துக் கொண்டிருக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |