அரசியல் குறித்து எழுந்த வதந்திக்கு திரிஷா விளக்கமளித்துள்ளார்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா ராங்கி என்ற படத்தில் நடித்திருக்கின்றார். லைகா தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுத “ராங்கி” எனும் படத்தை இயக்குனர் எம். சரவணன் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்திற்கு சி.சத்யா இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட போது படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் படத்தில் நிறைய சர்ச்சை இருப்பதாக தெரிவித்து படத்திற்கு அனுமதி வழங்க மறுத்தனர்.
மேலும் படத்தை மேல்முறையீட்டு குழுவிற்கு கொண்டு சென்று அங்கு குறிப்பிட்ட காட்சிகளை நீக்கினால் மட்டுமே அனுமதி தர முடியும் என தெரிவித்தார்கள். இதனையடுத்து முப்பது காட்சிகளை நீக்கிய பிறகு தணிக்கை குழு யுஏ சான்றிதழை வழங்கியது. இந்த நிலையில் படக்குழு ப்ரோமோஷனுக்காக செய்தியாளர்களை சந்தித்தார்கள். அப்போது பேசிய திரிஷா கூறியதாவது, நான் திரைக்கு வந்து 20 ஆண்டுகள் ஆகின்றது.
நான் எப்போதும் நேர்மறையான கருத்துக்களை மட்டுமே எடுத்துக் கொள்வேன். எதிர்மறையான கருத்துக்கள் எதையும் நான் கவனிக்க மாட்டேன். காங்கிரஸ் கட்சியில் இணைய போவதாக வதந்திகள் வெளியானது. இந்த தகவல்கள் ஒரு சதவீதம் கூட உண்மை இல்லை. எனக்கும் அரசியலுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லை. என்னிடம் எப்போது திருமணம்? உங்களுக்கு பிடித்த நடிகர் யார்? இது போன்ற கேள்விகளை தவிர்ப்பது நல்லது என தெரிவித்துள்ளார்.