Categories
சினிமா தமிழ் சினிமா

“இது எப்படி இருக்கு தெரியுமா.?” எனக்கு போட்டி நான் தாங்க, என்னை விட்ருங்க”… விஜய் பேச்சுக்கு சீமான் கருத்து..!!!!

இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது குறித்து சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்ற 24-ம் தேதி வாரிசு இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜயிடம் எந்த போட்டி வந்தாலும் எது வந்தாலும் உங்கள் கண்ணில் பயத்தை பார்த்ததே இல்லை, உங்களை தேடி வரும் போட்டிகளை எல்லாம் நீங்கள் எப்படி சமாளிக்கின்றீர்கள் என கேள்வி கேட்கப்பட்டபோது, 1990-களில் போட்டியாக எனக்கு ஒரு நடிகர் உருவானார். முதலில் போட்டியாளராக இருந்தார். பிறகு சீரியஸான போட்டியாளராக மாறினார். அவர் மேல், அவரின் வெற்றி மேல் இருந்த பயத்தால் நானும் ஓட ஆரம்பித்தேன். நான் போகும் இடத்திற்கு எல்லாம் அவரும் வந்து நின்னாரு. நான் இந்த அளவிற்கு வளர காரணமாக இருந்தாரு. அவரை தாண்டும் முயற்சியில் நானும் போட்டி போட்டுக் கொண்டே இருந்தேன். அந்த மாதிரியான போட்டியாளர் உங்க வாழ்க்கையிலும் இருக்க வேண்டும்.

அந்த போட்டியாளர் உருவான வருடம் 1992. அந்த போட்டியாளரின் பெயர் ஜோசப் விஜய். ஜெயிக்கணும் என்ற எண்ணம் இருக்கிற அனைவருக்கும் போட்டியாளர் இருக்க வேண்டும். அந்த போட்டியாளர் நீங்களாக இருக்க வேண்டும். உங்களுக்கு நீங்க தான் எதிரி, நீங்க தான் போட்டி. நீங்க அடுத்தவங்கள அந்த மாதிரி பார்க்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. உங்கள் உயரம் என்ன என உங்களுக்கே தெரியாமல் போய்விடும். உங்களுடன் முழுமையாக இருங்கள், அது மட்டுமே போட்டியைத் தாண்டி சிறப்பாகச் செய்யும் என தெரிவித்தார்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசிய போது விஜயின் கருத்து பற்றி பதில் அளித்தார். எனக்கு நான்தான் போட்டி என வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது பற்றி என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு சீமான் பதில் அளித்துள்ளதாவது, “இது எப்படி இருக்கு தெரியுமா.? விளையாட ஆள் இல்லை என்றால் பந்தை நாமலே சுவற்றில் எரிந்து விளையாடுவோம். இல்லையா மேலும் கோபத்தில் இருக்கும்போது கண்ணாடி முன் நின்று திட்டிட்டுபோவோம் இல்லையா, அது மாதிரி தம்பி திரைப்படம் வசனம் பேசிட்டார். அவருக்கு போட்டி அவரே என கருதுவது நல்லது தான். விஜய் பாதுகாப்பாக விளையாடுகிறார். எனக்கு போட்டி நான் தாங்க, என்னை விட்டுருங்க என கூறுகின்றார். அது ஒரு பாதுகாப்பு விளையாட்டு. அந்த முத்திரையை நான் பாராட்டுகிறேன் என சீமான் பேசியுள்ளார். இது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.

Categories

Tech |