தளபதி 67 படத்தில் பிரபல வில்லன் நடிகர் நடிப்பதை உறுதி செய்யதுள்ளார்.
தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67-ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இத்திரைப்படத்தின் பூஜை சென்ற டிசம்பர் 5-ம் தேதி போடப்பட்டது. இத்திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்க அனிருத் இசை அமைக்க இருக்கின்றார்.
இந்த நிலையில் இத்திரைப்படத்தில் நடிப்பதை பிரபல வில்லன் நடிகர் உறுதி செய்து இருக்கின்றார். இத்திரைப்படம் குறித்து பிரபல நடிகர் மன்சூர் அலிகான் பேசி இருக்கின்றார். இவர் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது, தளபதியின் முதல் படத்திலிருந்து நான் அவருடன் நடித்தேன். நாங்கள் 10-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சேர்ந்து பணியாற்றி இருக்கின்றோம். அண்மைகாலமாக என்னால் அவருடன் நடிக்க முடியவில்லை. தற்போது விஜயின் அடுத்த திரைப்படத்தில் மீண்டும் அவருடன் இணைவதில் மகிழ்ச்சி என கூறியுள்ளார். இதன் மூலம் தளபதி 67 திரைப்படத்தில் நடிப்பதை மன்சூர் அலிகான் உறுதி செய்துள்ளார். இதன் காரணமாக படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே அதிகரிக்க செய்துள்ளது.