பிரபல நடிகை தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது.
பிரபல நடிகை துனிஷா ஷர்மா (20) மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் அலிபாபா தஸ்தான் இ காபூல் என்ற தொடரில் தற்போது நடித்து வந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் நடிகை துனிஷா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். இவர் தற்கொலை செய்து கொண்டதால் இவர் கர்ப்பமாக இருந்ததாக பல்வேறு வதந்திகள் பரவியது.
இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி இருக்கின்றது. அதில் அவர் கர்ப்பமாக இல்லை என தெரிய வந்திருக்கின்றது. மேலும் தூக்கில் தொங்கியதால் மூச்சு திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாகவும் சொல்லப்படுகின்றது. அவர் காதல் தோல்வி அடைந்ததால் மன அழுத்தத்தில் இருந்து வந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்திருக்கின்றனர். நடிகையின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளது. இவரின் இந்த திடீர் மரணம் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.