Categories
சினிமா தமிழ் சினிமா

யார் நம்பர் 1 ஹீரோ..? சண்டை போடும் தல-தளபதி வெறியன்ஸ்… பொதுவான ரசிகர்களின் கருத்து என்ன..? இதோ நீங்களே பாருங்க..!!

யார் நம்பர் ஒன் என்ற கேள்விக்கு ரசிகர்களின் பதிலை பார்க்கலாம்.

வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது.

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படமும் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

அஜித்-விஜய் இருவரின் திரைப்படம் ஒரே நேரத்தில் வெளியாவதால் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் மோதிக் கொண்டிருக்கின்றார்கள். இதை பார்த்த பொதுவான ரசிகர்கள் எந்த திரைப்படத்தின் கதை நன்றாக இருக்கின்றதோ அத்திரைப்படமே வெற்றி பெறும். இரண்டு திரைப்படங்களின் கதைகள் நன்றாக இருந்தால் இரண்டு திரைப்படமும் வெற்றி திரைப்படங்கள் தான். இதற்கு ஏன் சண்டை போடுகின்றீர்கள்? ஹீரோக்காக படம் ஓடிய காலம் எல்லாம் மாலையேறி விட்டது. தற்போது கதை சரியாக இல்லை என்றால் அஜித் படம் என்ன? விஜய் படம் என்ன? எதுவும் ஓடாது. இது அவர்களுக்கே தெரியும். அப்படி கதையினால் சொதப்பிய படங்கள் இருவருக்குமே இருக்கின்றது. இதனால் வாரிசு-துணிவு படங்களின் ஹீரோ “கதை தான்” என கூறுகின்றார்கள்.

Categories

Tech |