திரைத் துறையில் மிக உயரிய விருதான 93வது ஆஸ்கர் விருகான அதிகாரபூர்வ பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது
திரைஉலகில் ஆஸ்கர் விருது மிகப்பெரிய விருதாக கருதப்படுகிறது . அதன்படி 93 வது ஆஸ்கர் விருதுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது . அந்த பட்டியலை நடிகை பிரியங்கா சோப்ரா வெளியிட்டார் .அவர் 23 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட உள்ளன எனவும் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குனர் உள்ளிட்ட 10பிரிவுகளின் கீழ் இந்த ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட உள்ளன என்றும் கூறியுள்ளார்.
மேலும் இயக்குநர் டேவிட் பிஞ்சரின் மாங்க் திரைப்படமும் மற்றும் கிறிஸ்டோபர் நோலனின் டெனட் திரைப்படமும் இந்த விருதுக்கான பட்டியலில்இடம் பெற்று உள்ளது. அதுமட்டுமல்லாமல் சிறந்த தயாரிப்பு, வடிவமைப்பு மற்றும் ஒளிப்பதிவு ஆகிய2 பிரிவுகளின் கீழ் விருதுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது . மேலும் இந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழா வரும் ஏப்ரல் 25ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சலஸில் நடைபெற உள்ளது.என்று அவர் கூறியுள்ளார்.