காதலருடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை நடிகை ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்டுள்ளார்.
பிரபல நடிகையான ரகுல் ப்ரீத் சிங் தமிழில் தடையறத் தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ, என்ஜிகே, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று என பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவர் தற்போது சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்திலும் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை தவிர்த்து தெலுங்கு, இந்தி திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார்.
இவர் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ஜாக்கி பாக்னானியை காதலிப்பதாக அண்மையில் தெரிவித்தார். மேலும் இருவரும் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடிய வீடியோவையும் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் காதலருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கின்றார். மேலும் சாண்டா கொடுத்த மிகப்பெரிய கிஃப்ட் இவர் தான் எனவும் தெரிவித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றார்கள்.