நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தை பார்த்து ரசிகர்கள் குலுங்கி சிரிப்பதாக வடிவேலு தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு. நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம்” நாய் சேகர் ரிட்டன்ஸ்”. இந்த படத்தில் பிக்பாஸ் ஷிவானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தை லைக்கா ப்ரொடக்சன் தயாரித்துள்ளது. இத்திரைப்படம் சென்ற 9-ம் தேதி ரிலீசானது. இந்த நிலையில் நடிகர் வடிவேலு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றார். இதன் பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, செந்தில் வேல்முருகனே தரிசிக்க வந்தது மனதுக்கு ஆறுதலாக இருக்கின்றது. மனதில் கஷ்டம் இருந்தால் திருச்செந்தூர் முருகனை வணங்கும்போது உங்க கஷ்டம் எல்லாம் தீரும். உங்க குறை எல்லாம் தீரும். எல்லா வளமும் பெற்று நல்லா இருப்போம். நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் மிகவும் நன்றாக வந்திருக்கின்றது. மக்கள் படத்தை பார்த்து குலுங்கி குலுங்கி சிரிக்கின்றார்கள். குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் அது.
இத்திரைப்படத்தை பார்த்தவங்க என்னை போனில் தொடர்பு கொண்டு வாழ்த்துறாங்க. பெரிய வெற்றி படமா இருப்பதால் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள். அடுத்ததாக நான் மாறி செல்வராஜ் இயக்கி இருக்கும் மாமன்னன் திரைப்படமும் நல்ல கதை. இந்த படமும் மக்களுக்கு பிடித்ததாக இருக்கும். மேலும் சந்திரமுகி 2 திரைப்படத்திலும் நடிக்கின்றேன். நான் மீண்டும் திரைக்கு வந்ததை ரசிகர்கள் சந்தோஷமாக பார்க்கிறார்கள். இது கடவுளின் ஆசிர்வாதம் என தெரிவித்துள்ளார்.