Categories
சினிமா தமிழ் சினிமா

காலில் விழாத குறையா கேட்டேன்… ஆனா சரண்யா பொன்வண்ணன் வரல… விழாவில் தயாரிப்பாளர் வருத்தம்..!!!

அருவா சண்ட திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் மிகவும் வருத்தத்துடன் பேசி உள்ளார்.

அருவா சண்ட திரைப்படத்தை ஒயிட் ஸ்கிரீன் புரொடக்சன் சார்பாக வி.ராஜா தயாரிக்கின்றார். மேலும் அவரே ஹீரோவாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் சிலந்தி, ரணதந்த்ரா உள்ளிட்டோர் நடிக்க ஆதிராஜன் இயக்கியிருக்கின்றார். இந்த படம் வருகின்ற 30ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற தயாரிப்பாளரும் ஹீரோவுமான ராஜா கூறியுள்ளதாவது, இந்த திரைப்படத்தில் நான் நிறைய கற்றுக் கொண்டேன். உயிரைக் கொடுத்து இந்த விழாவை நடத்துகின்றோம்.

இந்த விழாவில் ஹீரோயின் மட்டுமல்ல படத்தில் அம்மா கேரக்டரில் நடித்திருக்கும் சரண்யாவும் வரவில்லை. சரண்யா பொன்வண்ணன் மேடத்திடம் காலில் விழாத குறையாக விழாவுக்கு அழைத்தும் அவர் வர மறுத்துவிட்டார். இதே பெரிய படம், பெரிய தயாரிப்பாளர் என்றால் அந்த நிகழ்ச்சிக்கு சென்று இருப்பார். சிறிய தயாரிப்பாளர்கள் என்றால் கேவலமாக நினைக்கின்றார்கள். இந்த படத்திற்காக நான் நிறைய கஷ்டப்பட்டு இருக்கின்றேன்.மேலும் காயப்பட்டு இருக்கின்றேன். என்னை போன்ற தயாரிப்பாளர்கள் படத்திற்கும் சப்போர்ட் பண்ணுங்க. தயவுசெய்து சிறு தயாரிப்பாளர், பெரிய தயாரிப்பாளர், புதியவன் பழையவன் என பாரபட்சம் பாரபட்சம் பார்காதீங்க என பேசி இருக்கின்றார்.

Categories

Tech |