சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டிருப்பதிக தகவல் வெளியாகி இருக்கின்றது.
சுஷாந்த் சிங் ராஜ்புத் பீகார் மாநிலத்தில் பாட்னாவில் கிருஷ்ண குமார் சிங் மற்றும் உஷா சிங் ஆகியோருக்கு பிறந்தார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் தேதி உயிரிழந்தார். பிரபல இந்திய நடிகரான சுஷாந்த் சிங் தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதன் மூலம் தனது வாழ்க்கையை தொடங்கினார். இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு ஸ்டார் பிளஸின் “கிஸ் தேஷ் மே ஹை மெரா தில்” என்ற காதல் நதி நாடகத்தில் நடித்தார். பின்னர் கடந்த 2009-ஆம் ஆண்டு ஜி டிவியில் “சோப்ரா ஓபரா பவித்ரா ரிஷ்டா” என்ற தொடரில் நடித்தார். கை போ சே! “என்ற திரைப்படம் மூலம் சுஷாந்த் சிங் வெள்ளி திரையில் அறிமுகமானார். மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட எம்.எஸ்.தோனி தி அண்ட்டோல்ட் ஸ்டோரி என்ற திரைப்படத்தில் சுஷாந்த் சிங் நடித்து பிரபலமானார்.
கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் தேதி மும்பையில் இருக்கும் குடியிருப்பில் சுஷாந்த் சிங் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டார். இவரின் மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்ததாக சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. இவரின் உடலை பிரேத பரிசோதனை செய்த நபர்களில் ஒருவரான ரூப்குமார் என்பவர் சுஷாந்த் தற்கொலை செய்து கொள்ளவில்லை எனவும் அவர் கண்டிப்பாக கொலை செய்யப்பட்டிருக்கின்றார் எனவும் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது, அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மும்பையில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் அவரின் உடலில் பல காயங்கள் காணப்பட்டது. கை, கால்கள் உடைந்தும் இருந்தது. பொதுவாக பிரேத பரிசோதனை செய்யும் போது வீடியோ எடுக்க வேண்டும். ஆனால் சுஷாந்த் சிங்கின் உடலை வீடியோ எடுக்க வேண்டும். புகைப்படம் மட்டும் எடுத்தால் போதும் என தெரிவித்தனர். இதன் காரணமாக எனது சீனியர் அதிகாரிகளிடம் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். ஆனால் அவர்கள் உன் வேலையை மட்டும் பார் என சொல்லிவிட்டார்கள். இதனால் புகைப்படம் மட்டும் எடுத்துவிட்டு உடனே காவலர்களிடம் ஒப்படைத்தோம் ரூப்குமார். இந்த நிலையில் இவரின் வாக்குமூலம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.